72 வது குடியரசு தினத்தை முன்னிட்டு விழாவுக்கான ஒத்திகை சென்னை கடற்கரையில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.
நாடு முழுவதும் 72 ஆவது குடியரசு தின விழா வரும் 26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. மாநிலங்களில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் ஆளுநர் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை மெரினா கடற்கரையில் காமராஜர் சாலையில் காந்தி சிலை அருகே தமிழக அரசின் சார்பில் குடியரசு தினவிழா வரும் 26 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் கடந்த 3 நாட்களாக மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே நடைபெற்று வருகிறது. மூன்றாது நாளாக இன்றும் ஒத்திகை நடைபெற்றது. ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டவர்களை மரபுபடி வரவேற்பது எப்படி என்றும் ஒத்திகை நடைபெற்றது.
இது தவிர ஆளுநர் கொடியேற்றும்போது ஹெலிகாப்டரில் இருந்து பூக்களை தூவும் நிகழ்வும் ஒத்திகை செய்து பார்க்கப்பட்டது. விருதுகள் வழங்கும் நிகழ்வு குறித்தும் ஒத்திகை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக முப்படையினர் அணி வகுப்பு, வாகனங்களின் அணிவகுப்புகள் நடைபெற்றன.
இதன் தொடர்ச்சியாக ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரள மாநிலங்களின் பாரம்பர்ய கலைநிகழ்ச்சிகளுக்கான ஒத்திகையும் நடைபெற்றது. ஒத்திகையில் கலைஞர்களின் நடனங்கள் இடம்பெற்றன.