வருகிற சட்டமன்ற தேர்தலில் இரட்டை சிலை சின்னத்தில் போட்டியிட தயார் என்றும் 2 இடங்களை கேட்பதாகவும் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளர், மறவர், அகமுடையார் உள்ளிட்ட சமுதாயங்களை ஒன்றிணைத்து 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். சசிகலா விடுதலையான பிறகு அவரது அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பார் எனக்கூறிய கருணாஸ், அதிமுக கூட்டணியில் தான் தொடர்வதாக குறிப்பிட்டார். மேலும், வருகிற தேர்தலில் இரட்டை சிலை சின்னத்தில் போட்டியிட தயார் என்றும் அதிமுகவிடம் 2 இடங்களை கேட்கவுள்ளதாகவும் கருணாஸ் தெரிவித்துள்ளார்.







