Tokyo Olympics: இந்திய மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளி வென்றார்

டோக்கியோ ஒலிம்பிக்கின் 57 கிலோ எடைப்பிரிவில் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளி பதக்கம் வென்று சாதனைப்படைத்துள்ளார். ஜப்பானின் டோக்கியோவில் இன்று இந்திய வீரர் ரவிக்குமார் மற்றும் ரஷ்ய வீரர் சவுர்…

டோக்கியோ ஒலிம்பிக்கின் 57 கிலோ எடைப்பிரிவில் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளி பதக்கம் வென்று சாதனைப்படைத்துள்ளார்.

ஜப்பானின் டோக்கியோவில் இன்று இந்திய வீரர் ரவிக்குமார் மற்றும் ரஷ்ய வீரர் சவுர் உகேவ் ஆகியோருக்கு இடையே 57 கிலோ எடைப்பிரிவினருக்கான மல்யுத்தப் போட்டி நடைப்பெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் ரஷ்ய வீரர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் 7-4 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்த ரவிக்குமார் வெள்ளி பதக்கம் வென்று சாதனைப் படைத்தார்.

இந்திய மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியா

முன்னதாக அரையிறுதிப் போட்டியில் கஜகஸ்தான் வீரரான நுரிஸ்லாம் சனாயேவ்வை 7-9 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் ரவிக்குமார் வெற்றிபெற்றார். இந்த போட்டியின்போது தோல்வி பயத்தினால் கஜகஸ்தான் வீரர் சனாயேவ் இந்திய வீரரின் கையில் கடித்து காயத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் காயத்தோடு விளையாடி அரையிறுதியில் வெற்றிபெற்ற ரவிக்குமார், இறுதிப்போட்டியில் போராடி தோல்வியுற்றார்.

இறுதிப்போட்டியில் ஆதிக்கம் செலுத்திய ரஷ்ய வீரர் உகேவ்

மல்யுத்த வீரர் ரவிக்குமார் வெள்ளி பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. மேலும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் வெள்ளி பதக்கம் வெல்லும் இரண்டாவது நபராக ரவிக்குமார் சாதனைபடைத்துள்ளார். ஏற்கெனவே பளுத்தூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார், அதன் பின்னர் பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து வெண்கலம், ஆடவர் ஹாக்கி போட்டியில் வெண்கலம் மற்றும் குத்துச் சண்டை போட்டியில் லாவ்லினா வெண்கலம் பதக்கம் வென்றுள்ளனர்.

ரவிக்குமார் தாஹியாவின் பயிற்சியாளரான சுஷில் குமார் 66 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் 2012ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.