இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 சர்வதேச டி20 போட்டிகள் கொண்ட தொடருக்காக இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வந்தது.
முதல் இரண்டு ஆட்டங்களில் இந்திய மகளிர் அணி கைப்பற்றி தொடரை வென்றது.
இந்நிலையில் இன்று மூன்றாவது T20 போட்டி இலங்கை டம்புள்ளா மைதானத்தில் நடைபெற்றது. இந்திய மகளிர் அணி 2-0 என முன்னிலை வகித்துவந்த நிலையில் இன்று மூன்றாவது போட்டியை கைப்பற்றும் முனைப்பில் இலங்கை அணியும், மூன்றாவது போட்டியை கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்யும் நோக்கில் இந்திய அணியும் விளையாடின.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்கள் குவித்தது. 139 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 17வது ஓவரிலேயே 141 ரன்கள் அடித்து, இறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் தொடர் 2-1 என முடிவுற்ற நிலையில் இந்திய அணி இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது. இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக 3 வது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய மகளிர் அணியை முதன் முதலில் டி20 போட்டியில் சொந்த மண்ணில் வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடரில் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதுக்கு கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடர் வரும் ஜூலை 1ம் தேதி தொடங்குகிறது.