இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், 2வது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. இந்நிலையில், 3வது டி20 போட்டி செம்ஸ்போர்டில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து தொடக்க வீரராக இறங்கிய இளம் வீராங்கனை ஷபாலி வர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்தது.
154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டகாரர் டேனி வியாட் ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் விளாச, 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
Congratulations @englandcricket 🎉
A brilliant knock by @Danni_Wyatt steers England to a T20 victory.
And England win the multi-format series 10-6 🏆#ENGvIND | https://t.co/maY0IvmD21 pic.twitter.com/5Q5ZYvuvfE
— ICC (@ICC) July 14, 2021
இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது. ஏற்கெனவே, ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது குறிப்பிடத்தக்கது.







