லண்டனில் இந்திய இளம் பெண் கொடூர கொலை! பிரேசில் நாட்டவர் கைது!

இங்கிலாந்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம்பெண் குத்திக்கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானமா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் கோந்தம் தேஜஸ்வினி. 27 வயதான இவர், கடந்த 3 ஆண்டுகளாக முன்பு மேற்படிப்புக்காக லண்டன் சென்றார்.  கோந்தம்…

இங்கிலாந்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம்பெண் குத்திக்கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானமா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் கோந்தம் தேஜஸ்வினி. 27 வயதான இவர், கடந்த 3 ஆண்டுகளாக முன்பு மேற்படிப்புக்காக லண்டன் சென்றார்.  கோந்தம் தேஜஸ்வினிக்கு திருமணம் செய்வதற்காக பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இதனையடுத்து அடுத்த ஒரு மாதத்தில் அவர் சொந்த ஊர் திரும்ப திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில் தேஜஸ்வினி தஙகியிருந்த குடியிருப்புக்குள் புகுந்த பிரேசில் நாட்டை சேர்ந்தவர் தேஜஸ்வினியையும், மற்றொரு பெண்ணையும்  கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இதில் தேஜஸ்வினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் படுகாயம்  அடைந்த மற்றொரு பெண்ணை  சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு போலீசார் பிரேசில் நாட்டை சேர்ந்த கேவன் அன்டோனியோ (23) என்பவரைகைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தேஜஸ்வினி உடலை கொண்டு வர ஒன்றிய மற்றும் தெலங்கானா அரசுகள் உதவ வேண்டும் உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த மாதம் தேஜஸ்வினி ஹைதராபாத்திற்கு வருவதாக இருந்தார்.  திருமணத்துக்கு ஏற்பாடு செய்து வந்தததால், திருமணம் நிச்சயம் ஆனதும், இந்தியா வருகிறேன் என கூறிவிட்டு லண்டனிலேயே இருந்த நிலையில், அவர் குத்திக்கொலை செய்யப்பட்டது சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.