குறுவை சாகுபடிக்காக திறந்து விடப்பட்ட காவிரி நீர் முக்கொம்பு வந்தடைந்தது!

மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை கடந்த 12-ம் தேதி திறக்கப்பட்ட நிலையில், காவிரி நீர் இன்று காலை திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையில்…

மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை கடந்த 12-ம் தேதி திறக்கப்பட்ட நிலையில், காவிரி நீர் இன்று காலை திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது.

குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் இருந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ம்தேதி தண்ணீர் திறந்து வைத்தார். மேட்டூர் அணை நீர்மட்டம், 90 அடிக்கு மேல் இருந்தால், திட்டமிட்டபடி ஜூன், 12ல் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.. கடந்த, 1934 ஆண்டு  முதன் முதலில் ஜூன், 12ல் தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின், 89 ஆண்டு வரலாற்றில் இதுவரை ஜூன் 12ல், 18 ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட நீரானது இன்று காலை திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. ஆர்பரித்து செல்லும் நீரை கண்ட விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.