போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்துக்கு கவிஞரும், பாடலாசியருமான வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், போதைக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கவிஞரும் பாடலாசியருமான வைரமுத்து, போதைக்கு எதிராக கையெழுத்திட்டு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திற்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் தனது ட்விட்டர் பதிவில், போதைக்கு எதிரான ஒருகோடிக் கையொப்பங்களுள் என்னுடையதும் ஒன்று. முன்னெடுத்துச் செல்லும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திற்கு பாராட்டு. போதை என்பது விலைக்கு வாங்கும் தற்கொலை. நாம் நாமாக இருக்கும் வரைதான் நமக்கும் நாட்டுக்கும் நல்லது எனத் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/Vairamuthu/status/1630032886442369024?t=j9bK4URyQ57sOLSOL_F1tw&s=08
-ம.பவித்ரா







