இந்தியன் சூப்பர் லீக்: பெங்கால் அணியை வீழ்த்தியது கேரளா பிளாஸ்டர்ஸ்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் முதல் போட்டியில் 3-1 கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது. கேரளா பிளாஸ்டர்ஸ் அணி இந்தியன் சூப்பர் லீக் 2022-23 ஆம் ஆண்டின் கால்பந்து தொடர்…

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் முதல் போட்டியில் 3-1 கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது.

கேரளா பிளாஸ்டர்ஸ் அணி இந்தியன் சூப்பர் லீக் 2022-23 ஆம் ஆண்டின் கால்பந்து தொடர் நேற்று முதல் தொடங்கியது. நேற்றைய தினம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற முதல் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ், ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின.

பரபரப்பான ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் சரிக்குச் சமமாக விளையாடி ஒரு கோல் கூட அடிக்காமலிருந்த நிலையில், இரண்டாம் பாதியில் அதிரடி காட்டிய கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 71வது நிமிடத்தில் முதல் கோலும், 81 வது நிமிடத்தில் இரண்டாவது கோலும் அடிக்க, 87வது நிமிடத்தில் தனது முதல் கோலை பதிவு செய்தது ஈஸ்ட் பெங்கால் அணி.

பெங்கால் அணியின் கோலை வாங்கிய கேரளா பிளாஸ்டர்ஸ் அணி அடுத்த 89 வது நிமிடத்திலேயே 3 வது கோலை அடித்து வெற்றியை உறுதி செய்தது. எனவே ஆட்ட நேர முடிவில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 3-1 என முன்னிலை வகித்து வெற்றி கண்டது.
இன்று நடைபெறும் இரண்டாவது போட்டி பெங்களூரில் உள்ள ஶ்ரீ கண்டீவரா மைதானத்தில் மாலை 7.30 மணிக்குத் தொடங்கப்பட உள்ளது. இதில் பெங்களூரு மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதவுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.