முக்கியச் செய்திகள் இந்தியா

சபரிமலை: மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் 15ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது. நவம்பர் 16ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர். டிசம்பர் 27ம் தேதியோடு மண்டல பூஜை நிறைவடைந்து நடை அடைக்கப்படும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ந்து வரும் டிசம்பர் 30ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 2023ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி நடை அடைக்கப்படும். 2023ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடக்கும்.

பக்தர்கள் சபரிமலையின் http://www.sabarimalaonline.org என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம்.

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு துவங்கியது, தினசரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் 15ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது. நவம்பர் 16ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர். டிசம்பர் 27ம் தேதியோடு மண்டல பூஜை நிறைவடைந்து நடை அடைக்கப்படும். தொடர்ந்து வரும் டிசம்பர் 30ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு 2023ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி நடை அடைக்கப்படும். 2023ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடக்கும்.

இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக தினசரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு அறிவித்துள்ளது. ஐயப்ப பக்தர்கள் வரும் வாகனங்கள் நிலக்கல் வரையே அனுமதிக்கப்படும். அங்கிருந்து பம்பைக்கு கேரள அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிரதமர் மோடிக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன் : ராகுல்

Niruban Chakkaaravarthi

மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கின் கார் கவிழ்ந்து விபத்து; அவரது மனைவி மற்றும் தனி உதவியாளர் உயிரிழப்பு!

Saravana

காதல் கணவருடன் சென்ற மகள் – அழுது புரண்ட பெற்றோர்

Halley Karthik