போர்ச்சுகலில் சுற்றுலாவுக்குச் சென்ற இந்தியாவைச் சேர்ந்த கர்ப்பிணி உயிரிழந்ததையடுத்து அந்நாட்டு சுகாதார அமைச்சர் மார்டா டெமிடோ பதவி விலகினார்.
சுற்றுலாவுக்குச் சென்றிருந்த இந்திய கர்ப்பிணிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சான்டா மரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, நியோனாட்டாலஜி சிகிச்சை வசதி இல்லாத காரணத்தால் சாவோ பிரான்சிஸ்கோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதனால் உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் அவர் உயிரிழந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தச் சம்பவத்துக்கு பொறுப்பேற்ற போர்ச்சுக்கல் சுகாதாரத் துறை அமைச்சர் மார்டா டெமிடோ பதவி விலகினார்.
அண்மை செய்தி: பாஜகவிற்கு எதிராக இருப்பவர்கள் மீதே சிபிஐ சோதனை-கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு
அவசர கால மகப்பேறியல் சேவைகளை தற்காலிகமாக மூட மார்டா டெமிடோ முடிவு செய்தது மற்றும் சிகிச்சைக்காக பல மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டதால் உயிரிழந்த இந்திய பெண் சுற்றுலாப் பயணி ஆகிய காரணங்களால் அவருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தது.
இதையடுத்து, அவர் சுகாதார அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். இந்தியாவைச் சேர்ந்த கர்ப்பிணி உயிரிழந்த செய்தி வெளியான 5 மணி நேரத்தில் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார் மார்டா டெமிடோ. அவரது ராஜிநாமா கடிதத்தை பிரதமர் ஏற்றுக் கொண்டார்.