இந்திய பகுதியில் மீன் பிடித்துகொண்டிருந்த பாம்பன் மீனவர்களின் வலைகளை அறுத்து இலங்கை கடற்படையினர் கற்களால் தாக்குதல் நடத்தி விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாம்பனில் இருந்து 200க்கும் மேற்பட்ட விசைப்படகில் 2500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது இந்திய எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து படகில் வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் கற்கள் மற்றும் பாட்டில்களால் தாக்குதல் நடத்தி வலைகளை அறுத்து விரட்டியுள்ளனர்.
இந்திய எல்லைக்குள் நுழைந்து இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் வேதனை அளிப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மீனவர்களை பாதுகாப்பதோடு பாரம்பரிய இடத்தில் நின்று மீன் பிடிக்க மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







