செய்திகள்

இந்தியாவில் தஞ்சமடைந்த ராஜபக்சே? – தூதரகம் விளக்கம்

மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகள் இந்தியாவுக்குள் தஞ்சமடைந்ததாக தகவல் வெளியாகி வரும் நிலையில் இந்திய தூதரகம் விளக்கம் அளித்துள்ளது. 

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். இதையடுத்து, ராஜபக்சேவின் ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது.

இதற்கிடையே பிரதமர் இல்லத்தைவிட்டு வெளியேறிய ராஜபக்சே குடும்பத்தினர் கடற்படை தளத்திற்கு நேற்று சென்றனர். அதைத்தொடர்ந்து, கடற்படை தளத்தில் போராட்டக்காரர்கள் குவிந்தனர். கடற்படைத் தளத்தில் இருந்து ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியானது.

மேலும், அவர்கள் இந்தியாவில் தஞ்சமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள தகவலில், சில அரசியல்வாதிகளும் அவர்களின் குடும்பத்தினரும் இந்தியாவுக்குச் சென்றிருப்பதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. இந்தத் தகவல்கள் தவறானவை. இதில், எந்தவித உண்மையும் இல்லை. இந்த செய்திகளை உயர் ஆணையம் மறுக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

கவனம் ஈர்க்கப்படும் கேரள தேர்தல்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: 141 ரன்களுக்கு சுருண்டது பாக்.

Halley Karthik

தை அல்ல மாசி, பங்குனி என எந்த மாதம் பிறந்தாலும், திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் நல்ல வழி பிறக்காது; அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

Saravana