டெல்லியில் மீண்டும் முழுநேர ஊரடங்கை அமல்படுத்த எந்த திட்டமும் இல்லை என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய இல்லத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சத்யேந்திர ஜெயின் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இதன்பிறகு செய்தியாளர்களிடையே பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த சில நாட்களில் டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் 3,583 கொரோனா புதிய வழக்குகள் பதிவாகி உள்ளன. இப்போது தொற்று உயர்வு நான்காவது அலையை காட்டுகிறது என தெரிவித்தார்.
தொடர்ந்துபேசிய அவர், கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். இதனால் பொதுமக்கள் கவலைப்பட தேவையில்லை. குறிப்பாக கொரோனா தடுப்பூசியில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். நேற்று டெல்லியில் 71,000 தடுப்பூசிகள் போடப்பட்டன. டெல்லியில் முழுநேர ஊரடங்கிற்கு எந்த திட்டமும் இல்லை என தெரிவித்தார்.







