இந்தியாவின் முன்னணி உள்நாட்டு விமான நிறுவனங்கள் சுமார் 1,100க்கும் மேற்பட்ட விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்குப் பின் ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடாவின் கைவசமாகியுள்ளது. தற்போது ஏர் இந்தியா நிறுவனம் 470 விமானங்களை வாங்குவதற்கு ஏர்பஸ் நிறுவனத்துடனும் போயிங்க் நிறுவனத்துடனும் சமீபத்தில் ஒப்பந்தம் செய்துள்ளது. 40 ஏ350, 210 ஏ320 என்ற இரண்டு வகையான விமானங்களை ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து ஏர் இந்தியா வாங்க இருக்கிறது. விமான போக்குவரத்துத் துறையில் மிகப் பெரிய ஒப்பந்தமாக இது பார்க்கப்படுகிறது.
நாட்டின் மிகப் பெரிய விமான போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ ஏறக்குறைய 500 விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஆகாசா விமான நிறுவனம் 72 விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதில் 16 விமானங்கள் ஏற்கெனவே டெலிவரி செய்யபப்ட்டுவிட்டன. மீதம் 56 விமானங்கள் விரைவில் டெலிவரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோ பர்ஸ்ட் நிறுவனம் 72 விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. விஸ்தாரா நிறுவனம் 17 போயிங் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இவற்றையெல்லாம் சேர்த்தால் உள்நாட்டு விமான நிறுவனங்கள் கிட்டத்தட்ட 1115 விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
அண்மைச் செய்தி: 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.272 – பாகிஸ்தானில் வரலாறு காணாத விலை உயர்வு
இந்தியாவில் தற்போது 700 விமானங்கள் விமான போக்குவரத்து சேவையை வழங்கி வருகின்றன. இதில் 470 விமானங்கள் ஏர்பஸ் நிறுவனத்தை சேர்ந்தவை. மீதமுள்ள 159 விமானங்கள் போயிங் நிறுவனத்தை சேர்ந்தவை.
விமான போக்குவரத்து சேவை இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 2210 விமானங்கள் தேவைப்படும் என்று போயிங் நிறுவனம் கணித்துள்ளது. கடந்த பிப்ரவரி 14-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியாவுக்கு அடுத்த 15 ஆண்டுகளில் 2000 விமானங்கள் தேவைப்படும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.







