முக்கியச் செய்திகள் சினிமா

4 இயக்குநர்கள் உழைப்பில் உருவாகும் இந்தியன் 2!

மிகவும் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் இந்தியன் 2 படத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

கமல்ஹாசன் நடிப்பில் ’இந்தியன் 2’ படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி வந்தார். லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தின் படப்பிடிப்பில், கிரேன் விபத்து, கொரோனா பரவல், பட்ஜெட் தொடர்பாக ஷங்கருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் பிரச்சினை எனப் பல காரணங்களால் படப்பிடிப்பு பலமுறை தள்ளிப்போடப்பட்டது. இதனால் இயக்குநர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் அறிவிப்புகள் வெளியாயின.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின் ஒருவழியாக அனைத்து பிரச்சனைகளும் தற்போது சுமூகமாக முடிந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.
சென்னை வடபழனி பிரசாத் லேபில் இந்தியன் 2 படத்திற்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்றது. இந்த பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் திரைக்கதை எழுத்தாளர்களுள் ஒருவரான பிரபல எழுத்தாளர் ஜெயமோகன், பேட்டி ஒன்றில் பேசுகையில் இந்தியன் 2 படம் மொத்தம் 2 மணி நேரம் 10 நிமிடங்கள் இருப்பதாகக் கூறினார். மிகவும் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் இப்படத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

மேலும் இப்படத்தில் இன்னொரு தயாரிப்பாளராக உதயநிதி ஸ்டாலினும் இணைந்தார். ஏற்கனவே கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தை வாங்கி வெளியிட்டிருந்தார் உதயநிதி. அதில் நல்ல லாபம் கிடைத்தது மட்டும் இல்லாமல் 100 நாட்களைக் கடந்து திரையரங்கில் ஒடிக் கெண்டிருக்கிறது.

இந்நிலையில் மீண்டும் இக்கூட்டணி இணைந்துள்ளது. இதேபோல உதயநிதி நடிக்கும் ஒரு படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இயக்குநர் ஷங்கருடன் இயக்குநர்கள் வசந்தபாலன், சிம்புதேவன் மற்றும் அறிவழகன் ஆகியோர் இப்படத்தை இணைந்து இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

படத்தில் இடம்பெறும் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகரகளை இயக்குநர்கள் வசந்தபாலன், சிம்புதேவன் மற்றும் அறிவழகன் இயக்குவார்கள் எனவும் படத்தில் இடம்பெறும் கமல் உள்ளிட்ட சில முக்கியமான முன்னணி கதாபாத்திரங்களை இயக்குநர் ஷங்கர் இயக்குவார் எனவும் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கள்ளக்குறிச்சி வன்முறை வழக்கு; 77 பேருக்கு ஜாமீன்

G SaravanaKumar

ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் : விநியோகம் தொடக்கம்

Halley Karthik

தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக்கொலை; இளைஞர் வெறிச்செயல்

EZHILARASAN D