முக்கியச் செய்திகள் சினிமா

இந்தியன் – 2: விவேக் வேடத்தில் நடிப்பது யார்?

இந்தியன் 2 படத்தில் நடித்திருந்த நகைச்சுவை நடிகர் விவேக் மறைந்துவிட்டதால் அவர் நடித்து வந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கப் பலரிடம் அணுகியதாகக் கூறப்படுகிறது.

கமல்ஹாசன் நடிப்பில் ’இந்தியன் 2’ படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி வந்தார். லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தின் படப்பிடிப்பில், கிரேன் விபத்து, கொரோனா பரவல், பட்ஜெட் தொடர்பாக ஷங்கருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் பிரச்சினை எனப் பல காரணங்களால் படப்பிடிப்பு பலமுறை தள்ளிப்போடப்பட்டது. இதனால் இயக்குநர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் அறிவிப்புகள் வெளியாயின.பின் ஒருவழியாக அனைத்து பிரச்சனைகளும் தற்போது சுமூகமாக முடிந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. சென்னை வடபழனி பிரசாத் லேபில் இந்தியன் 2 படத்திற்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்றது. இந்த பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு நேற்று (ஆகஸ்ட் 24) தொடங்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆனால் இப்படத்தில் நடித்திருந்த நகைச்சுவை நடிகர் விவேக் மறைந்துவிட்டதால் அவர் நடித்து வந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கப் பலரிடம் அணுகியதாகக் கூறப்படுகிறது. ஆனால் இறுதியில் அவருக்குப் பதிலாக அந்தக் கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடிக்க ஒப்பந்தம் செய்தனர்.

அதே சமயம் நடிகர் கோவை பாபுவை பயன்படுத்தி அவருக்கு விவேக் போன்ற வேடமிட்டு, விவேக் நடித்தது போலவே இருக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. என்றாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை.மேலும் இதில் நடிக்கும் நடிகர் நடிகைகள் இடம் பெறும் அதிகாரப்பூர்வ போஸ்ட்டரோ அல்லது டீசரோ வெளியாகும் பட்சத்தில் யார் யார் எந்தெந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது தெரியவரும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

Web Editor

அழிவில் அண்டார்டிகா பனிப் படலங்கள்!

எல்.ரேணுகாதேவி

கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவியேற்கிறார்.

EZHILARASAN D