T20 போட்டி; தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணமாக…

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணமாக வந்துள்ளது. இதுவரை 2 ஆட்டங்கள் நடந்துள்ள நிலையில் 3வது ஆட்டம் நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு ஆட்டங்களிலும் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றிருந்ததால் இந்த ஆட்டம் மிக முக்கியமானதாக கருதப்பட்டது. தென்ஆப்பிரிக்கா அணி வென்றால் இந்த தொடரை தென்ஆப்பிரிக்கா கைப்பற்றிவிடும். எனவே இந்த போட்டி இந்திய அணிக்கு பலபரீட்சையாக அமைந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட்-இஷான் கிஷன் கூட்டணி அதிரடியாக விளையாடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

இருவரும் அரைசதம் அடித்த நிலையில் கெய்க்வாட் 57 ரனிலும், கிஷன் 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஸ்ரேயஸ் அய்யர் 14 ரன்னிலும், கேப்டன் ரிஷப் பண்ட் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஹர்திக் பாண்ட்யா ஒருசில பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுக்க, இந்திய அணி இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 180 ரன்கள் என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களம் இறங்கியது. இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்க ஆட்டக்காரர்களாக பவுமா 8 ரன்களிலும், கென்டிரிக்ஸ் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய டாவின் பெட்ரியோஸ் 20 ரன்களிலும், வென்டர் டசன் 1 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்தவர்களும் சொர்ப்ப ரன்களிலேயே ஆட்டமிழக்க இறுதியில் தென்ஆப்பிரிக்க அணி 19.1 வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

இதனால்  தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில அபார வெற்றி பெற்றதுஇந்திய அணியின் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளையும் சஹால் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றிக்கு வழி வகுத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.