தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது இந்தியா
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அத்துடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது இந்தியா.
அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 57 ரன்களும், கேப்டன் ரோகித் சர்மா 43 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து, விளையாடிய கோலி அதிரடியாக 49 ரன்கள் எடுத்தார். அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 61 ரன்கள் எடுத்தார்.
தினேஷ் கார்த்திக் 17 ரன்களுடன் களத்தில் இருந்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் மகராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது.
டேவிட் மில்லர் சதம் வீணானது. விக்கெட் கீப்பர் குவின்டன் டி காக் அரை சதம் பதிவு செய்திருந்தார். இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், அக்ஸர் படேல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.









