#INDIA வெல்லும்! அதை 2024 சொல்லும்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க.வுக்கும் – அதனுடன் கூட்டு சேர்ந்து நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைப்பவர்களுக்கும்  ‘விசா’ வழங்கி வெளியே அனுப்பிட மக்கள் ஆயத்தமாகிவிட்டார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள்…

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க.வுக்கும் – அதனுடன் கூட்டு சேர்ந்து நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைப்பவர்களுக்கும்  ‘விசா’ வழங்கி வெளியே அனுப்பிட மக்கள் ஆயத்தமாகிவிட்டார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. பாஜகவுக்கு எதிராக 26 கட்சிகள்  கொண்ட எதிர்க்கட்சிகள் கூட்டணியின் ஆலோசனை கூட்டம் பெங்களூரூவில் நடைபெற்றது. இந்த கூட்டணிக்கு இந்தியா என பெயர்  வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு..க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க.வுக்கும் – அதனுடன் கூட்டு சேர்ந்து நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைப்பவர்களுக்கும்  ‘விசா’ வழங்கி வெளியே அனுப்பிட  மக்கள் ஆயத்தமாகிவிட்டார்கள். அதனை மறைக்கத்தான் அமலாக்கத்துறை தொடங்கி அத்தனை அமைப்புகளையும் ஏவி அச்சுறுத்தும் வேலைகள் நடக்கின்றன.
‘இந்தியா’வில் உள்ள யாரும் இத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சப் போவதில்லை.  உண்மையான இந்தியாவின் எதிரிகள் யார் என்பதை அடையாளம் காட்டுவோம்!  #INDIA வெல்லும்! அதை 2024 சொல்லும்!” என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.