கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் டோக்கன் வழங்கப்படுகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனாளிகள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுத்துள்ளது.
இந்த நிலையில் பயனாளிகளை தேர்வு செய்யும் பொறுப்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், இன்று காலை முதல் பொதுமக்களுக்கு டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் தெருவாரியாக சென்று வினியோகம் செய்யப்படும் என்றார். வழங்கப்பட்ட டோக்கனில் உள்ள தேதியன்று பொதுமக்கள் முகாமுக்கு வந்தால் போதும் என்றும் அவர் குறிப்பிட்டார்.







