ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்கும் -அனுராக் தாகூர்

ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்கும் என அனுராக்  தாகூர் பேசியுள்ளார்.  சென்னை தனியார் கல்லூரியில் ட்ரோன் திறன் மற்றும் பயிற்சி மாநாடு மற்றும்  ட்ரோன் உற்பத்தி மையத்தை மத்திய தகவல் ஒளிபரப்பு…

ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்கும் என அனுராக்  தாகூர் பேசியுள்ளார். 

சென்னை தனியார் கல்லூரியில் ட்ரோன் திறன் மற்றும் பயிற்சி மாநாடு மற்றும்  ட்ரோன் உற்பத்தி மையத்தை மத்திய தகவல் ஒளிபரப்பு ,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக்  தாகூர் தொடங்கி வைத்தும்,  ட்ரோன்களின் நிகழ்வை கண்டுகளித்தார்.

அப்பொழுது மேடையில் பேசிய அனுராக் தாகூர் , நாளுக்கு நாள் அறிவியல் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது,உலகில் உள்ள பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வாய்ப்பு இந்தியாவில் உள்ள இளைஞர்கள் மத்தியில் உள்ளது. கொரோனா காலகட்டத்தில் ட்ரோன் எவ்வளவு உதவியாக இருந்தது என நாம் பார்த்தோம் என்றார்.

மேலும், ட்ரோன்கள் தற்போது வேளாண் துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது, மிக பெரிய அளவில் அவை உதவியாக உள்ளதால் பிரதமர் அரசு திட்டங்களை அவற்றை சேர்த்துள்ளார். 2014ஆம் ஆண்டு MAKE IN INDIA திட்டம் குறித்து பிரதமர் பேசும்போது இது சாத்தியமா என கேள்வி எழுப்பினார்கள் இன்று 2022ஆம் ஆண்டு இந்தியாவின் இளைஞர்கள் அவற்றை சாத்திய படுத்திவருகின்றனர் கூறினார்.

அத்துடன், வேளாண்துறையில் தொடர்ச்சியாக அறிவியல் வளர்ச்சிகளைக் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, ஹிமாச்சல்பிரதேசம் போன்ற மலை உள்ள பகுதிகளில் ட்ரோன் பயன்படுத்துவது மிகவும் உதவியாக உள்ளது இருப்பினும் ட்ரோன் மூலம் அதிவேகமாகக் காய்கறிகள் மற்றும் பழங்களை வெளியே கொண்டு செல்ல கண்டுபிடிப்புகள் வர வேண்டும் என்றார்.

மேலும், விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக அதிகரிக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ட்ரோன் தொழில்நுட்பத்தில் இந்தியா உலகின் மையமாக உருவெடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.