வரும் 100வது சுதந்திர தினத்தில் இந்தியா எல்லா துறைகளிலும் முன்னேற்றம் பெற்று வல்லரசாகவும் வளர்ச்சி அடையும் என்பது உறுதி என எல்.முருகன் பேசினார்.
சென்னை ஆவடியில் உள்ள CRPF வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 210 பேருக்கான பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியை மத்திய இணை அமைச்சர் திரு எல் முருகன் குத்து விளக்கு ஏற்றித் துவக்கி வைத்தார். பின்னர் பணி நியமன ஆணைகளை மத்திய இணை அமைச்சர் திரு எல்.முருகன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய எல்.முருகன், இந்தியா முழுவதும் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஆவடியில் நடைபெற்ற 14 துறைகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு சுமார் 210 பேருக்கு பணியாளர்கள் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் புதிய தொழில் முனைவோர்கள் உருவாக்கியுள்ளனர். உலகிலேயே அதிக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இது பெருமைப் பட வேண்டிய விசியம். வரும் நூறாம் ஆண்டு சுதந்திர தினத்தில் இந்தியா எல்லா துறைகளிலும் முன்னேற்றம் பெற்று வல்லரசாகவும் வளர்ச்சி அடையும் என்பது உறுதி என்றார்.
மேலும், தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் கலாச்சார பண்பாட்டு உறவு காலம் காலமாக இருக்கிறது. காசிக்கும் ராமேஸ்வரத்திற்கும் காசிக்கும் தென்காசிக்கும் காசிக்கும் சிவகாசிக்கும் இப்படி ஒரு மிகப்பெரிய ஒரு பந்தம் தமிழர்களுக்கு இருக்கிறது. அதை மேலும் வலுப்பெறச் செய்யப் பிரதமரின் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இருக்கும் என்றார்.
நாம் எதைச் சொல்வதும் அதை தான் நாம் செய்வோம் பிரதமர் செங்கோட்டையில் சொன்னார். ராமர் கோவில் கட்டுவதும் அயோத்திகள் கட்டுவதும் கட்சியின் மிகப்பெரிய அஜந்தாவாக இருந்தது. அதனை எல்லாம் இன்று மக்களுக்குச் சொல்லி இருந்தும் உச்சநீதிமன்றம் உத்தரவு அனைத்து தரப்பட்டு மக்கள் கோவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.







