தொடர் விடுமுறை – குற்றால அருவிகளில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்

தென்காசி மாவட்டத்தில், இந்த வருடம் வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலம் பகுதிகளில் உள்ள அருவிகளில் நீர்வரத்து குறைந்த அளவே காணப்பட்டு வருகிறது.…

தென்காசி மாவட்டத்தில், இந்த வருடம் வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலம் பகுதிகளில் உள்ள அருவிகளில் நீர்வரத்து குறைந்த அளவே காணப்பட்டு வருகிறது.

குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து குறைந்த அளவை காணப்பட்டு வருகிறது. மேலும், ஐந்தருவியில் உள்ள 5 அருவிகளில் 2 அருவிகளில் மட்டுமே தண்ணீர் வரத்து சீராக வந்து கொண்டிருக்கும் சூழலில், மற்ற அருவிகளில் நீர்வரத்து குறைந்த அளவே காணப்பட்டு வருகிறது.

தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டாலும், தொடர் விடுமுறை தினம் என்பதால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

மேலும், நேற்று மகரஜோதி முடிவடைந்த நிலையில் கோயிலுக்கு சென்று திரும்பும் பக்தர்கள் ஏராளமானோர் குற்றால அருவிக்கு வருகை தந்த வண்ணம் உள்ள சூழலில், குற்றால அருவியானது தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டத்தாலும், ஐயப்ப பக்தர்கள் கூட்டத்தாலும் அலை மோதி வருகிறது.

தண்ணீரின் வரத்து குறைந்த அளவை காணப்பட்ட போதிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அளவுக்கு அதிகமாக காணப்பட்டு வருவதால் நீண்ட நேரம் காத்திருந்து சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் புனித நீராடி சென்று வருகின்றனர். அதேபோல் ஐந்தருவியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அளவுக்கு அதிகமாக காணப்பட்டு வரும் சூழலில் பாதுகாப்பு கருதி கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், தொடர் விடுமுறை தினம் வருவதால் நாளையும் நாளை மறுநாளும் அளவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் கூட்டம் குற்றாலத்திற்கு வருகை தருவார்கள் என்பதால் மேலும் பாதுகாப்பை பலப்படுத்தி சுற்றுலா பயணிகள் எந்தவிதமான அசம்பாவிதங்களின் இன்றி ஆனந்த குளியல் இட்டு சென்று வர தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசார் எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.