நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 284 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, 3 டி-20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி-20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி, அடுத்து டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 345 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சதமடித்து அசத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி 5 விக்கெட்டுகளையும் ஜேமிசன் 3 விக்கெட்டுகளையும் அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டாம் லாதமும் வில் யங்கும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . இவர்களைப் பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் கடுமையாகப் போராடினர்.
நிலையாக நின்று ஆடிய டாம் 95 ரன்களிலும் வில் யங், 89 ரன்களிலும் ஆட்டமிழந்த பிறகு அந்த அணியில் மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை. கேப்டன் வில்லியம்சன் 18 ரன்களிலும் ஜேமீசன் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து அந்த அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அக்ஷர் படேல் 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஜடேஜா, உமேஷ் யாதவ்
தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இதையடுத்து 49 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, இரண்டாம் இன்னிங்கை தொடங்கியது. மயங்க் அகர்வாலும் சுப்மன் கில்லும் களமிறங்கினர். சுப்மன்
கில் ஒரு ரன் எடுத்த நிலையில் ஜேமீசன் பந்துவீச்சில் போல்டானார். அடுத்து புஜாரா களமிறங்கினார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்
இழப்புக்கு 14 ரன்கள் எடுத்தது. நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.
இந்திய அணி தடுமாற்றத்துடனேயே இன்றைய ஆட்டத்தில் களமிறங்கியது. நிதானமாக ஆடிய புஜரா 22 ரன்கள் எடுத்த நிலையில்ம் ஜேமீசன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ரகானே 4 ரன்களில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி அதிர்ச்சிக் கொடுத்தார்.
அடுத்து வந்த ஜடேஜா டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுக்க, தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வாலும் தன் பங்கு 17 ரன்கள் சேர்த்த நிலையில் பெவிலியன் திரும்பினார். முதல் இன்னிங்ஸில் நினைத்து நின்ற ஸ்ரேயாஸும் அஸ்வினும் இந்த தொடரில் சிறந்த பார்டர்ஷிப்பை ஏற்படுத்தினர். அணியின் ஸ்கோர் 6 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்த நிலையில், ஜேமீசன் பந்துவீச்சில் போல்டானார்.
நின்று ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 65 ரன்கள் எடுத்திருந்தபோது சவுதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த விக்கெட் கீப்பர் விருத்திமன் சஹாவும் அக்சர்
படேலும் அணியின் ஸ்கோரை உயர்த்தியதால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது. ஸ்கோர் 7 விக்கெட் இழப்பு 234 ரன்களாக இருந்தபோது டிக்ளேர் செய்யப்பட்டது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 284 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
சஹா 61 ரன்களுடனும் அக்சர் படேல் 28 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து அணி சார்பில் சவுதி, ஜேமீசன் தலா 3 விக்கெட்டுகளையும்
அஜாஸ் படேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் நியூசிலாந்து அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. டாம் லாதம்ஜும் வில் யங்கும் களமிறங்கினர். இதில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின்,
யங்கை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்க செய்தார். இதையடுத்து சோமர்வில்லே களமிறங்கினார். இன்றைய ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி ஒரு
விக்கெட் இழப்புக்கு 4 ரன்களை எடுத்துள்ளது.