இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், அவசரப்பட்ட ரிஷப் பண்ட் 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்கள் எடுத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாளான நேற்று ரோகித் சர்மா 36 ரன்களில் ராபின்சனின் ஷார்ட் பிட்ச் பந்தில் ஆட்டமிழந்தார். நின்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 4 ரன்களிலும் கேப்டன் விராத் கோலி ரன் ஏதும் எடுக்காமலும் துணை கேப்டன் ரஹானே 4 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.
நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 125 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 57 ரன்னுடனும், ரிஷப் பண்ட் 7 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இன்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியது.
நிதானமாக ஆடிக்கொண்டிருந்த ரிஷப், 50 வது ஓவரில், ராபின்சன் பந்துவீச்சில் நான்கு ரன்கள் விளாசினார். அடுத்து பவுன்சரை சிக்சராக மாற்றினார், சிரித்துக்கொண்டே. அடுத்த குட் லென்த் பந்தை அடிக்க அது பேர்ஸ்டோவின் கைகளில் கேட்சாக மாறியது. அவசரப்பட்டு ஆட்டமிழந்ததாக வர்ணனையாளர்கள் வர்ணித்தனர் ரிஷப் பண்ட் ஆட்டத் தை.
இதையடுத்து ஜடேஜா, கே.எல்.ராகுலுடன் இணைந்துள்ளார். 57 வது ஓவர் வரை இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.