ஜோ ரூட் அரைசதம்: 2 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டியின் 2 வது இன்னிங்ஸில், இங்கிலாந்து அணி 2 விக்கெட்டை இழந்து ஆடிவருகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில்…

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டியின் 2 வது இன்னிங்ஸில், இங்கிலாந்து அணி 2 விக்கெட்டை இழந்து ஆடிவருகிறது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 278 ரன்கள் எடுத்தது.

கே.எல்.ராகுல் 84 ரன்களும் ஜடேஜா 56 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில், ஓலி ராபின்சன் 5 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் தனது 2 வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 11.1 ஓவர்களில் 25 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ரோரி பர்ன்ஸ் 11 ரன்களுடனும் டோம் சிப்ளே 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 4 வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.

பர்ன்ஸ் விக்கெட்டை முகமது சிராஜும் அடுத்து வந்த ஜாக் கிராலி விக்கெட்டை பும்ராவும் வீழ்த்தினர். இதையடுத்து 37 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி ஆடி வருகிறது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் அரை சதம் அடித்தார். அவர் 51 ரன்களுடனும் சிப்ளே 27 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.