முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

மக்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்தவர் கருணாநிதி.. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி கடிதம்

சமூகப் புரட்சியில் கருணாநிதி , லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்தவர் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் நினைவு நாளை ஒட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்.பி, ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கருணாநிதியின் நினைவு நாளில், நவீன தமிழகத்தை வடிவமைத்ததில் அவரது மகத்தான பங்களிப்பை பெருமைப்படுத்த விரும்புகிறேன்.சமூகப் புரட்சியில் கருணாநிதி முக்கிய மானவர் மட்டுமல்ல, லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்தவர். கூட்டாட்சி அரசியலில் பல்வேறு மாநில உரிமைகளை அங்கீகரிப்பதற்காக
போராடியவர்.

அவர் அமைத்த அடித்தளம், மக்கள் தங்கள் கலாச்சாரங்கள் மற்றும் அடையாளங்களை பாதுகாப்பதற்கும் தொடர்ந்து ஊக்குவிக்கிறது.

கருணாநிதியின் வீரமிக்க போராட்டம் மற்றும் அவர் உருவாக்கிய முற்போக்கான மக்கள் இயக்கத்திலிருந்து நாங்கள் வலிமை பெறுகிறோம். . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

“கருப்பு பணம் வாங்காத சில நடிகர்களில் நானும் ஒருவன்!”: கமல்ஹாசன்

Saravana

செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் – அமைச்சர் பெரியகருப்பன்

Jeba Arul Robinson

சிறுமிக்காக காரை நிறுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்