#INDvsNZ | டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு!

இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் தொடரில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.…

India won the toss and elected to bat in the first Test between India and New Zealand.

இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் தொடரில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது.

இதையும் படியுங்கள் : நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு?… உறுதியான ஆதாரம் தனது அரசிடம் இல்லை -கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

ஆனால், நேற்று அங்கு கனமழை கொட்டியது. இதனால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். டாஸ் கூட போடப்படாமல் முதல் நாள் ஆட்டம் ரத்தானது. இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. நேற்று டாஸ் போடப்படவில்லை என்பதால், இன்றைய ஆட்டம் டாஸ்-உடன் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.