இந்தியாவில் புதிதாக 7,774 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், உருமாறிய கொரோனா தொற்றான ஒமிக்ரான் வேகமாக பரவி வருகிறது. அதை தடுப்பதற்கான வேலைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில், 7,774 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,46,90,510 ஆக அதிகரித்துள்ளது. 8,464 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 3,41,22,795 பேர் குணமடைந்துள்ளனர்.
தொற்றுக்கு, கடந்த 24 மணி நேரத்தில் 306 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரி ழந்த வர்கள் எண்ணிக்கை 4,75,434 ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட் டவர் களில் 92,281 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நாட்டில் நேற்று மட்டும் 89,56,784 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன. இதுவரை 1,32,93,84,230 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.