இந்தியாவில் 6 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது கொரோனா

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்துக்கும் கீழாக கொரோனா தொற்றுப் பாதிக்கு  குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், உருமாறிய கொரோனா தொற்றான ஒமிக்ரான்…

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்துக்கும் கீழாக கொரோனா தொற்றுப் பாதிக்கு  குறைந்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், உருமாறிய கொரோனா தொற்றான ஒமிக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்துவதற்கான வேலைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இருந்தும் அந்த தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில்,5,784 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட குறைவாகும். நாடு முழுவதும் 7,995 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள் ளனர்.

இதையடுத்து 3,41,38,763 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 252 பேர் தொற்றுப் பாதிப்பில் உயிரிழந்துள்ளனர். இதுவரை தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,75,888 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 133.8 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.