இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ளது மெளமெரே (Maumere)நகரம். இங்கிருந்து 112 கி.மீ தொலைவில் உள்ள புளோரஸ் தீவில் இன்று அதிகாலை…

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ளது மெளமெரே (Maumere)நகரம். இங்கிருந்து 112 கி.மீ தொலைவில் உள்ள புளோரஸ் தீவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.

இந்த நிலநடுக்கம் புளோரஸ் கடற்பகுதியில் 18.5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இந்தியாவுக்கு பாதிப்பில்லை என்று இந்திய சுனாமி ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.