இந்தியாவில் இதுவரை 67.72 கோடி பேருக்கு தடுப்பூசி

இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக் கை மீண்டும் 4 லட்சத்தை கடந்தது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 42,618 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப் பட்டு உள்ளனர்.…

இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக் கை மீண்டும் 4 லட்சத்தை கடந்தது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 42,618 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப் பட்டு உள்ளனர். அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 36,385 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதுவரை 3,21,00,001 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது 4,05,681 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 97.43ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 330 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,40,225 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 58,85,687 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதுவரை மொத்த மாக 67.72 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.