முக்கியச் செய்திகள் இந்தியா

அடேங்கப்பா.. பெங்களூர்ல மட்டும் 107 மொழி பேசறாங்களாம்

பெங்களூர் நகரில் மட்டும் 107 மொழிகள் பேசப்படுவதாக மக்கள் கணக்கெடுப்பின் அடிப்ப டையில் செய்யப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில், டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட மெட்ரோபாலிட்டன் நகரங்களில் முக்கியமானது பெங்களூரு. இங்கு ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், பெங்களூரு நகரத்தில் மட்டும் 107 மொழிகள் பேசப்படுவதாக, மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கல்வியாளர்களால் எடுக்கப்பட்ட பகுப்பாய்வில் தெரிய வந்துள்ளது. இதில் வரையறுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள 22 மொழிகளும் பட்டியலில் இடம்பெறாத 84 மொழிகளும் பேசப்படுவதாகக் கூறப்படுகிறது.

பெங்களூரில் 44 சதவிகிதம் பேர் கன்னடம் பேசுபவர்களாகவும் தமிழை 15% பேரும் தெலுங்கு மொழியை 14% பேரும் உருது 12% பேரும் இந்தியை 6% பேரும் மலையாளத்தை 3% பேரும் பேசுவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாகலாந்து மாநிலத்தில் உள்ள திமாபூர் (103), அசாமின் சோனிட்புர் (101) ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றனர். ஏனாம் (புதுச்சேரி), கைமுர் (பீகார்), கான்புர் தெஹாத்(உ.பி), அரியலூர் (தமிழ்நாடு) ஆகியவை குறைந்த மொழிகள் பேசும் மாவட்டங்களாக கண்டறியப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மின் இணைப்புடன், ஆதார் எண் இணைப்பு; இன்று முதல் தொடக்கம்

G SaravanaKumar

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 7-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்

Arivazhagan Chinnasamy

சென்னையில் சரிந்த வாக்குப்பதிவு

Arivazhagan Chinnasamy