புதுச்சேரி தலைமைச்செயலகத்தின் மாதிரி படம் வெளியீடு

புதுச்சேரியில் 300 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்படவுள்ள சட்டப்பேரவை வளாகத்தின் மாதிரி புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தற்போதுள்ள சட்டப்பேரவை வளாகத்தில் இடநெருக்கடி காரணமாக புதிய சட்டப்பேரவையை கட்ட புதுச்சேரி அரசு மத்திய அரசிடம்…

புதுச்சேரியில் 300 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்படவுள்ள சட்டப்பேரவை வளாகத்தின் மாதிரி புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தற்போதுள்ள சட்டப்பேரவை வளாகத்தில் இடநெருக்கடி காரணமாக புதிய சட்டப்பேரவையை கட்ட புதுச்சேரி அரசு மத்திய அரசிடம் 300 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் கேட்டு இருந்தது, இந்நிலையில் மத்திய அரசு சட்டப்பேரவை வளாகம் கட்ட நிதிக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் சட்டப்பேரவை கட்டுவதற்கான ஆயத்த பணிகள் புதுச்சேரியில் தொடங்கியது.

புதிய கட்டிடம் கட்டுவதற்கான ஆலோசனை கூட்டம் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய சட்டப்பேரவை கட்டிடத்திற்கான மாதிரி புகைப்படம் வெளியிடப்பட்டது, இதனையொட்டி வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளதாக சட்டபேரவை தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.