இந்தியாவில் புதிதாக 30,256 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை கடந்த சில நாட்களாக, ஏற்ற இறக்க மாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,256 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 33,478,419 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 295 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,45,133 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 43,938 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,27,15,105 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் தொற்றுக்கு 3,18,181 பேர் இப்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை 80,85,68,144 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 37,78,296 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.







