சொர்க்கம் இங்குண்டு, வேறெங்கும் இல்லை என்ற வரிகள் படத்திற்காக எழுதிய தல்ல, தனது வாழ்க்கை தத்துவமும் அதுதான் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை பெயின் மற்றும் பாலியேட்டிவ் கெயர் தொண்டு நிறுவனம் சார்பில் இலவசமாக மருத்துவ உதவி வழங்கும் அபயம் என்ற காப்பகத்தை வில்லிவாக்கத்தில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் ஹாசன் திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
62 ஆண்டுகலமாக என் ரசிகர்களின் ஆசியால் இந்த மேடையில் நிற்கிறேன். சொர்க்கம் இங்குண்டு. வேறெங்குமில்லை. இது படத்திற்காக எழுதிய வரிகளல்ல, என் வாழ்க்கைத் தத்துவமும் அதுவே தான். அதைத்தான் இயேசுநாதரும், இந்த ஏழைகளில் யாருக்கு எதைச் செய்கிறீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்றார்.
மனிதம் போற்ற தவறிய எந்த மதமும் வளராது. இங்கு வெவ்வேறு மதம், மொழி சார்ந்தவர் கள் இருக்கிறார்கள். மதமே இல்லாத என்னை போன்றவர்களும் இருக்கிறார் கள். இவர்கள் ஒன்றிணைந்து வாழ்வதற்கான தளமாக இருப்பது மனிதம். 62 ஆண்டு காலமாக தன் ரசிகர்களின் ஆசியால் இந்த மேடையில் நான் நிற்கிறேன். இவ்வாறு கமல்ஹாசன் தெரி வித்தார்.
Advertisement: