இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 26,041 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் சில நாட்களாக தொற்று குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 26,041 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதார அமைச் சகம் தெரிவித்துள்ளது. இதில், கேரளாவில் மட்டும் 15,951 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3,36,78,786 ஆக அதிகரித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதே போல், தொற்று பாதிப்புகு ஒரே நாளில் 276 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இது வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,47,194 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 29,621 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,29,31,972 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழு வதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 2,99,620 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை 86,01,59,011 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 38,18,362 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.