எனது முதல் படம் சரியாக அமையாத காலத்தில் என் திரியை தூண்டியவர் இயக்குநர் தாமிரா என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
மறைந்த இயக்குநர் தாமிராவின் நினைவஞ்சலி கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள இயலாத இயக்குநர் சீனு ராமசாமி அவருடனான தனது அனுபவத் தை கடிதமாக எழுதி அனுப்பி இருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொரோனா காலத்திற்கு முன்பு ஓர் உதவி இயக்குனர் வேண்டும் என்றார் தாமிரா. தம்பி ஒச்சுமாயியை அனுப்பினேன். அந்த தம்பிதான் அவர் மருத்துவமனை நாட்களை நம்பிக் கையாக சொல்லிக் கொண்டே வந்தான். ஆனால் ஒருநாள் இதய தசைகள் கிழிபட தாமிரா நம்மை விட்டுட்டு போய்ட்டார் என்று அலைபேசியில் அழுதான்.
அவர் அட்மிட் ஆகியிருந்த மருத்துவமனை வாசலை கடக்க நேர்கையில் அவர் சொன்ன வார்த்தைகளை நினைக்கும் என் மனம். “சீனு உங்ககிட்ட இருக்கிற கவிதை உணர்ச்சி, அது ஸ்கீரின்பிளேல்ல வருது. அது இருக்கிற வரைக்கும் உங்களுக்கு தோல்வி இல்ல, உடம்பை மட்டும் பாத்துக்கங்க” என்றார் என்னிடம். உலகம் என்னை கைவிட்ட ஓர் நாளில் அவரிடம் இருந்து எனக்கு வந்த வார்த்தைகள் இவை.
உலகம் மட்டுமல்ல என்னை நானே அப்போது கைவிட்டுருந்தேன். அந்நாள் இந்நாள் போல் நினைவில் இருக்கிறது. நன்னம் பிக்கை தரும் நண்பன், தாயை போல் உயர்ந்தவன். இதுதான் இயக்குனர் தாமிரா. எப் போதும் எளிமையாகவும் அன்பான மனிதராகவும் அவர் இருந்தார். எப்போது சந்தித்தா லும் இலக்கியம், சினிமா என பேசி களைத்திருக்கிறோம். அவர் எப்போதும் நேற்றை பற்றி கவலையற்று நாளை பற்றிய நம்பிக்கையோடு இருந்த வர்.

என் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை மிகவும் முக்கியமானது. முதல் சினிமா சரியாக அமையாத காலத்தில் என் திரியை தூண்டியவர் தாமிரா. தாமீரா ஒரு நல்ல ஆன்மா தன் தந்தையை பெருமையாகக் கொண்டாடியவர். வசந்தகால மரத்தை வேரோடு பிடிங்கிய மாதிரி அவரை காலம் எடுத்து சென்று விட்டது. என் படப்பிடிப்புக்கு அவர் தந்தையோடு வந்து மகிழ்ந்த அந்நாளின் திருவிழாவை எப்போதும் மறவேன். இவ் வாறு சீனு ராமசாமி கூறியுள்ளார்.