முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் அவர் உடல்நிலை சீராக உள்ளது என்றும், அவருக்கு தேவையான ஊட்டச்சத்து, திரவ உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
89 வயதான மன்மோகன் சிங், ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
I pray for the good health and speedy recovery of Dr. Manmohan Singh Ji.
— Narendra Modi (@narendramodi) October 14, 2021
இந்நிலையில், அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பாக பிரதமர் மோடி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.