இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று இந்தூர் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. கடந்த 18-ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 12 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ராய்ப்பூரில் நடந்த 2-வது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது. தொடரை முழுமையாக வெல்லும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்க இருக்கிறது.
இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர்கள் களமிறங்க வாய்ப்புள்ளது. ஷாபஸ் அகமது, உமரான் மாலிக் ஆகியோர் இந்த தொடரில் இன்னும் களமிறக்கப்படவில்லை. அவர்களை இந்தப் போட்டியில் களமிறக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் கடந்த முறை கேப்டன் ரோஹித் சர்மா, சிராஜ் மற்றும் ஷமி இருவரும் நீண்ட நாட்களாக பந்துவீசி வருகிறார்கள். அவர்களுக்கு ஓய்வு அவசியம்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது..
இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றியை பெற்றால் ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி நம்பர் 1 இடத்தை பிடித்துவிடும். எனவே இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.