முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

கோவேக்ஸின் தடுப்பூசிக்கு இங்கிலாந்து அங்கீகாரம்

இங்கிலாந்தின் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் பட்டியலில், இந்தியாவின் கோவேக்ஸின் தடுப்பூசியும் சோ்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பாரத் பயோடெக்கின் நிறுவனம் கோவேக்ஸின் கொரோனா தடுப்பூசியை தயாரித்தது. இந்தியாவில் இரண்டாவதாக அதிகம் செலுத்தப்பட்ட தடுப்பூசி இது. இந்த தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளிக்காமல் இருந்து வந்தது. இதனால் அந்தத் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட இந்தியா்கள், இங்கிலாந்து செல்வதற்கு அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்நிலையில், கோவேக்ஸின் தடுப்பூசியை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த, உலக சுகாதார அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதியளித்தது.

இதையடுத்து, இங்கிலாந்தின் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் பட்டியலில் கோவேக்ஸின் தடுப்பூசியும் நேற்று (திங்கள்கிழமை) சோ்க்கப்பட்டது. இதையடுத்து இங்கிலாந்து செல்லும் இந்திய பயணிகள், தங்கள் பயணத்துக்கு முன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவோ, அங்கு சென்ற பின், தனிமைப்படுத்திக் கொள்ளவோ தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் பட்டியலில் சீனாவின் சைனோவாக் (Sinovac), சைனோஃபாா்ம் (Sinopharm) தடுப்பூசிகளும் சோ்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

அடுத்த ஆண்டு அகஸ்ட் மாதத்திற்குள் 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்புமருந்து; சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்!

Dhamotharan

நடிகர் சிவாஜி கணேசனின் மகன் பாஜகவில் இணைந்தார்!

Niruban Chakkaaravarthi

வீடு இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

Saravana Kumar