ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் இந்தியா உலகிற்கு முன்னுதாரணம்- பிரதமர் மோடி

பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் இந்தியா உலகிற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 90வது இன்டர்போல் பொதுச்சபை கூட்டம் நடைப்பபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து…

பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் இந்தியா உலகிற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 90வது இன்டர்போல் பொதுச்சபை கூட்டம் நடைப்பபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், உங்கள் அனைவரையும் இந்தியா வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அடுத்த ஆண்டு இன்டர்போல அமைப்பு உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிறது. இது அனைவருக்கும் பெருமையான தருணம் நிறைய தவறுகளில் இருந்து நிறைய பாடங்களை கற்றுக்கொண்டு இன்று தரமான ஒரு இடத்தில் இந்த அமைப்பு இருக்கிறது.

ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைக்கு அதிக அளவில் வீரர்களை அனுப்பி வைக்கும் நாடாக இந்தியா உள்ளது. உலகை சிறந்த இடமாக மாற்ற உலகளாவிய ஒத்துழைப்பு தேவை. உலகெங்கிலும் உள்ள காவல்துறை சமூக நலனை மேம்படுத்துகிறது.

எந்த ஒரு நெருக்கடியான நேரத்திலும் அவர்கள் முன்னணியில் இருப்பவர்கள், மக்கள் சேவையில் தியாகம் செய்த காவல்துறையினருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் இந்தியா உலகிற்கு முன்னாதரணமாக திகழ்கிறது. பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.