முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழில் பேச அறிவுறுத்திய சபாநாயகர்; அவையில் எழுந்த சிரிப்பலை

தமிழில் பேசுமாறு பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரனிடம் சபாநாயகர் அறிவுறுத்தியதால், அவையில் சிரிப்பலை எழுந்தது.

சட்டப்பேரவையில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டுவந்தார். தீர்மானத்தின் மீது முதலமைச்சர் ஸ்டாலின், எம்.எல்.ஏ.க்கள் ஓ.பன்னீர்செல்வம், வேல்முருகன், ஈஸ்வரன், ஜவாஹிருல்லா, ஜி.கே.மணி, செல்வப்பெருந்தகை, ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அனைவரும் தீர்மானத்துக்கு ஆதரவாகக் கருத்துகளைப் பதிவு செய்த நிலையில், தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், “மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே” என்று கூறிவிட்டு சில விநாடிகள் பேசாமல் இருந்தார்.

இதையடுத்து குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, தமிழ், தமிழிலேயே பேசுங்கள் என்று நயினார் நாகேந்திரனைப் பார்த்துக் கூறினார். அதற்கு தமிழில் தான் பேசப்போகிறேன் என்று நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.இதைக் கண்ட உறுப்பினர்கள் சத்தமாக சிரித்ததால் அவையில் சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து “வார்த்தை வரவில்லை அல்லவா” என்று சபாநாயகர் அப்பாவு கிண்டல் தொனியில் பேசினார்.

பின்னர் சிரித்த முகத்துடன் பேச்சைத் தொடர்ந்த நயினார் நாகேந்திரன், தாய்க்கு பழி நேர்ந்தால் அது மகனுக்கும் தான் என்றும் அதேபோல் அன்னைத் தமிழுக்கு பழிநேர்ந்தால் அது நம் அனைவருக்கும் தான்.  இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பு இருப்பின் அதை பாஜக எதிர்க்கும் என்றும், ஐ.நா.சபை, அயோத்தி என்று எங்கு சென்றாலும் பிரதமர் மோடி திருக்குறளையும், தமிழ்ப் புலவர்களையும் பற்றித்தான் பேசுவார். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்குத் தனி இருக்கை அமைத்துத்தந்தவரும் பிரதமர் மோடி தான். இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.

C பிரிவு மாநிலங்கள் அதாவது இந்தி மொழி பேசாத மாநிலங்கள் என்று வகைப்படுத்தப்பட்ட மாநிலங்களில் இந்தி மொழியைத் திணிப்பதாகக் கூறுவது எப்படி என்று தெரியவில்லை. C பிரிவு மாநிலங்களில் தாய்மொழியில் தான் கல்வி இருக்க வேண்டும்.  பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், 2 நாட்களுக்கு முன்பாகக் கூட பிரதமர் மோடி பேசுகையில் மாநில சட்டங்கள், நீதிமன்ற தீர்ப்புகள் தாய்மொழியில் இருக்க வேண்டும் என்று தான் குறிப்பிட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

எனவே தாய் மொழி தமிழுக்கு இழுக்கு நேரும் என்பதை எந்தவிதத்திலும் நம்ப முடியாததால், தீர்மானத்தை எதிர்த்து பாஜக வெளிநடப்பு செய்வதாக நயினார் நாகேந்திரன் பேசினார். இதையடுத்து நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள் நால்வரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சேதுபதி மன்னர் முதல் கருணாநிதி, ஜெயலலிதா வரை; கச்சத்தீவின் வரலாறு

EZHILARASAN D

மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

Halley Karthik

தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு ஒப்புதல் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

EZHILARASAN D