ஆசியக் கோப்பைக்கான 17 பேர் கொண்ட உத்தேச இந்திய அணியின் பட்டியல் வெளியாகியுள்ளது.
2023-ம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் 30-ம் தேதி ஆசிய கோப்பை ஒரு நாள் போட்டிகள் துவங்குகிறது. உலக கோப்பைக்கு தேவையான இறுதிக்கட்ட அணியை தேர்வு செய்வதற்கு உதவும் இந்த தொடரில் பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகள் ஏற்கனவே தங்களுடைய அணிகளை அறிவித்து விட்டன.
ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய 2 முக்கிய வீரர்கள் காயத்தை சந்தித்துள்ளதால் இந்தியா மட்டும் இதுவரை தங்களுடைய அணியை அறிவிக்காமல் தாமதம் செய்து வருகிறது. ஆறு அணிகள் கலந்துகொள்ளும் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இந்தப் போட்டியில் மொத்தம் 13 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
2023 ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டி பாகிஸ்தானில் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. எனினும் இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்ல மறுப்பு தெரிவித்ததால் இந்த ஆண்டு இந்தியாவில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளது. ஆசியக் கோப்பை ஆக.30ம் தேதி தொடங்கி செப்.17ஆம் நாள் முடிவடைய உள்ளது.
இந்நிலையில் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லியில் நடைபெற உள்ள இந்திய அணி தேர்வுக் குழுவில் நாளை ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட் பங்கேற்க உள்ளார்கள்.
17 பேர் கொண்ட உத்தேச இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, பும்ரா, ஷமி, சிராஜ், இஷான், குல்தீப், அக்ஷர் படேல், ஷர்துல் தாக்குர், திலக் வர்மா, சஹால்/அஸ்வின். கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர்- உடல்நிலை பொறுத்து மாறுபடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.







