நடிகர் யோகி பாபு மீது தயாரிப்பாளர் மோசடி புகார்! குற்றச்சாடுக்கு எதிராக நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக விளக்கம் அளித்த இயக்குனர்!

பணம் பெற்றுக்கொண்டு நடிக்காமல் மோசடி செய்துவிட்டதாக நடிகர் யோகி பாபு மீது காவல் நிலையத்தில் தயாரிப்பாளர்  ஒருவர் புகார் அளித்த நிலையில், அத்திரைப்படத்தின் இயக்குனர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக விளக்கம் அளித்துள்ளார்.  சென்னை…

பணம் பெற்றுக்கொண்டு நடிக்காமல் மோசடி செய்துவிட்டதாக நடிகர் யோகி
பாபு மீது காவல் நிலையத்தில் தயாரிப்பாளர்  ஒருவர் புகார் அளித்த நிலையில், அத்திரைப்படத்தின் இயக்குனர் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக விளக்கம் அளித்துள்ளார். 

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருபவர்
ஹாசிர். இவர் கடந்த 20 ஆண்டுகளாக ROOBY பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்பட
நிறுவனம் நடத்தி வருகிறார். வண்டி, கன்னிமாடம், மங்கி டாங்கி உள்ளிட்ட பல
திரைப்படங்களை இந்நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு ஹாசிர் ஜாக் டேனியல் என்ற திரைப்படத்தை
தயாரிக்க முடிவு செய்தார். இந்த திரைப்படத்தை கௌசிக் ராமலிங்கம் இயக்க நடிகர்
ஜிவி பிரகாஷ் மற்றும் காமெடி நடிகர் யோகி பாபு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

மேலும் இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் யோகி பாபுவிடம் ரூ. 65 லட்சம் பேசி அட்வான்ஸ் தொகையாக ரூ. 20 லட்சம் தயாரிப்பாளர் ஹாசிர் கொடுத்தார். 5லட்சம் பணமாகவும், 15 லட்சம் காசோலையாகவும் கொடுத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் திரைப்பட சூட்டிங் தொடங்கியதும் நடிகர் யோகி பாபுவை
நடிப்பதற்காக தயாரிப்பு நிறுவனம் அழைத்தும் யோகி பாபு வராமல் ஏமாற்றி
வந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் பணத்தை திருப்பி தரும்படி தயாரிப்பாளர் ஹாசிர் கேட்டபோது தராமல் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து தயாரிப்பாளர் ஹாசிர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் யோகி பாபு மீது இன்று புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், “கடந்த 2020ஆம் ஆண்டு ஜாக் டேனியல் என்ற திரைப்படத்தில் ஒப்பந்தமாகி தனது காட்சிகளை முழுவதுமாக நடித்து கொடுத்துவிட்டதாகவும், தயாரிப்பாளர் ஹாசிர்
பாதியிலேயே படத்தை நிறுத்திவிட்டு பின்னர் பணத்தை திருப்பி கேட்டால் எப்படி
கொடுக்க முடியும்” என்று நடிகர் யோகி பாபு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கைவிடப்பட்ட ஜாக் டேனியல் திரைப்படத்தின் இயக்குனர் கவுசிக் நியூஸ் 7 தமிழுக்கு நடிகர் யோகி பாபு மீதான புகார் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

“படத்தின் தயாரிப்பாளர் ஹாசிர் ஒரே ஒரு ஷெடியூல் சூட்டிங் மட்டுமே
நடத்தியதாகவும், 12 நாட்கள் சூட்டிங் நடந்ததில் 10 நாட்கள் நடிகர் யோகிபாபு
நடித்ததாகவும்” படத்தின் இயக்குனர் கவுசிக் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும், படத்தை பாதியில் நிறுத்தியது படத்தின் தயாரிப்பாளர் ஹாசிர் தான்.
யோகிபாபு நடித்ததற்கான சம்பளம் அவருக்கு கொடுக்கப்பட்டு விட்டது. 4 ஆண்டுகளாக
கிடப்பில் போட்டு படம் டிராப் ஆகி விட்டதாக படத்தின் இயக்குனர் கவுசிக்
ராமலிங்கம் நியூஸ் 7 தமிழுக்கு தெரிவித்துள்ளார்.

ஜாக் டேனியல் படத்தின் ஹீரோ ஜீவி.பிரகாஷ். இந்த படத்தை கைவிட்டு விட்டதற்கான
NOCயை தயாரிப்பாளர் ஹாசிர் கொடுத்து விட்டதாக இயக்குனர் கவுசிக் ராமலிங்கம்
தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.