இந்தியாவில் புதிதாக 2,17,353 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,17,353 பேருக்கு கொரோனா தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாராத்துறை தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,42,91,917 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் நோய்த்தொற்றால் 1,185 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிகை 1,74,308 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 1,18,302 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,25,47,866 ஆக அதிகரித்துள்ளது. தற்போதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 15,69,743 ஆக உள்ளது. நாட்டில் இதுவரை 11,72,23,509 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதித்த முதல் மூன்று நாடுகளில் அமெரிக்காவிற்கு அடுத்த இரண்டாவது இடத்தில் இந்தியாவும் பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.