முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முதுகலை பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதற்காக நாடுமுழுவதும் 255 நகரங்களில் தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முதுகலை மருத்துவ நீட் தேர்வும் ஒத்திவைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதன்காரணமாக மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் “கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுவதாக இருந்த முதுகலை மருத்துவ நீட் தேர்வுவை ஒத்திவைக்க முடிவுச் செய்யப்பட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். இளம் மருத்தவ மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை ஒத்திவைக்க எதிர்கட்சி கொடுத்த அழுத்தம் காரணமாக பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது முதுகலை மருத்துவ நீட் தேர்வும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.