இந்தியா எதிரிகளை வலிமையுடன் கையாள்கிறது-பிரதமர் மோடி உரை

இந்தியா எதிரிகளை வலிமையுடன் கையாள்கிறது என பிரதமர் மோடி கார்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய போது தெரிவித்தார். தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகுவிமரிசையாக, உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளியை முன்னிட்டு நேற்று…

இந்தியா எதிரிகளை வலிமையுடன் கையாள்கிறது என பிரதமர் மோடி கார்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய போது தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகுவிமரிசையாக, உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளியை முன்னிட்டு நேற்று உத்தரபிரதேச மாநிலத்தில் அயோத்தி நகரில் 15 லட்சத்திற்கும் அதிகமான விளக்குகளை ஏற்றி கின்னஸ் சாதனை படைத்தனர்.

பிரதமர் மோடி ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடும் வழக்கம் கொண்டுள்ளார். இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையை வீரர்களுடன் கொண்டாடுவதற்காக பிரதமர் மோடி கார்கில் புறப்பட்டு சென்றார்.

கார்கில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். கார்கிலில் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு வந்தே மாதரம் மற்றும் பாரத் மாதா கி ஜே போன்ற கோஷங்களை ராணுவ வீரர்கள் எழுப்பினர். அவர்களுடன் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டார். வீரர்களுக்கு தன் கையால் இனிப்புகளை பிரதமர் மோடி வழங்கினார்.

https://twitter.com/narendramodi/status/1584430806075789313

தொடர்ந்து பிரதமர் மோடி ராணுவ வீரர்கள் முன் உரையாற்றினார். அவர் பேசும்போது, நீங்கள் அனைவரும் பல ஆண்டுகளாக எனக்கு, குடும்பத்தினராக இருந்து வருகிறீர்கள். தைரியமுடைய நம்முடைய வீரர்களுடன் கார்கிலில் தீபாவளி கொண்டாடுவது என்பது எனக்கு கிடைத்த சிறப்புரிமை. இந்திய பாதுகாப்பின் தூண்களாக நமது ராணுவ படைகள் உள்ளன. கார்கிலின் இந்த வெற்றி நிலத்தில் இருந்து நாட்டு மக்கள் மற்றும் உலகத்திற்கு மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துகளை நான் தெரிவித்து கொள்கிறேன்.

இந்தியா தனது வெளி மற்றும் உள் எதிரிகளை வலிமையுடன் கையாள்கிறது. தீவிரவாதம், நக்சலிசதத்தை” நாட்டிற்குள் இருந்து “வேரோடு பிடுங்க” நடவடிக்கை எடுக்கப்பட்ட்டு வருகிறது. இந்தியா ஒருபோதும் போரை முதல் விருப்பமாக பார்க்கவில்லை.நாம் எப்போதும் இறுதி முயற்சியாக போரைப் பார்த்திருக்கிறோம்.

நாம் உலக அமைதிக்கு ஆதரவாக இருக்கிறோம். ஆனால் வலிமை இல்லாமல் அமைதியை அடைய முடியாது. எங்கள் ஆயுதப் படைகளுக்கு வியூகங்களும் வலிமையும் உள்ளன. யாரேனும் நம் மீது தீய நோக்கத்தோடு பார்வையை செலுத்தத் துணிந்தால், அதற்குத் தகுந்த பதிலடி கொடுப்பது எப்படி என்பது நமது முப்படைகளுக்கும் நன்றாகத் தெரியும்.

கார்கிலில் நமது படைகள் தீவிரவாதத்தினை அழித்தது. அதற்கு சாட்சியாக இன்னும் இருப்பதற்காக நான் அதிர்ஷ்டசாலியாகிறேன். என்னுடைய பழைய புகைப்படங்களை இங்கே என்னிடம் காட்டினார்கள். அதற்காக நன்றியுணர்வு கொண்டவராக இருக்கிறேன். தீபாவளி என்பது பயங்கரவாத முடிவுக்கான திருவிழா. அதனை கார்கில் சாத்தியம் ஆக்கியுள்ளது என்றும் பிரதமர் மோடி பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.