திராவிட ஆட்சியில் ஆதரவற்றோர் யாரும் இல்லை – அமைச்சர் சேகர் பாபு

ஆதரவற்றவர்கள் என்று யாரும் இல்லை. அனைவரும் ஆண்டவன் பிள்ளைகள் தான். அதுவும் இந்த திராவிட ஆட்சியில் யாரும் ஆதரவற்றோர் இல்லை என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைத்துள்ள…

ஆதரவற்றவர்கள் என்று யாரும் இல்லை. அனைவரும் ஆண்டவன் பிள்ளைகள் தான். அதுவும் இந்த திராவிட ஆட்சியில் யாரும் ஆதரவற்றோர் இல்லை என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைத்துள்ள பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் சாலையோரங்களில் உள்ள 150 குழந்தைகள், தீபாவளியை கொண்டாடும் வகையில், இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, குழந்தைகளுக்கு இனிப்புகள், பட்டாசுகள் வழங்கினார். தொடர்ந்து குழந்தைகளுடன் பட்டாசு வெடித்து தீபாவளிப் பண்டியகையை கொண்டாடினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, “ஜார்ஜ் டவுன் பட்டாசு விற்பனையாளர் சங்கத்தினர், ஆதரவற்றோர் மற்றும் சாலையோரங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு பட்டாசுகள், இனிப்புகள் மற்றும் இரண்டு வேளை உணவும் வழங்கி வருகிறார்கள். வியாபார நோக்கத்தோடு மட்டுமின்றி, மனிதாபிமானத்தோடும் செயல்பட்டு வரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆதரவற்றவர்கள் என்று யாரும் இல்லை அனைவரும் ஆண்டவன் பிள்ளைகள் தான்.
அதுவும் இந்த திராவிட ஆட்சியில் யாரும் ஆதரவற்றோர் இல்லை. 3, 4 ஆண்டுகளுக்கு பின் தீபாவளியை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். மக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. பொருளாதாரம் மேம்பட்டுள்ளது. தீபாவளி பட்டாசின் ஒலியைப் போல் மக்கள் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும்.கோயில்களில் அசாதாரண சூழல் இருக்கும் சில நேரங்களில் தான் மெட்டல் டிடெக்டர் பயன்படுத்தப்படும், மற்ற படி எப்போதும் போல் தான் கோயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.